பந்தாவா ஆரம்பிச்சாச்சி ஆனா என்னத்த எழுதுரதுன்னு தான் தெரியல :( நானும் காலைல இருந்து மானிட்டர (ஹலோ.. நான் கணினித்திரையைச் சொன்னேன்) வெறிச்சிப் பார்த்துக்கிட்டு இருக்குறேன் ஆனா தக்காளி ஒன்னும் தோனமாட்டேங்குது !
சரி ஒரு கவிதையாச்சும் எழுதலாம்னு பாத்தா இன்னைக்குன்னு பாத்து ஒன்னும் வரமாட்டேங்குது (ஆமா இவரு டெய்லி நாப்பது பக்கம் கவிதை எழுதுராரு இன்னைக்குதான் பாவம் எதுவும் தோனலை, கேட்டுக்கோங்கப்பா). என்ன எழுதுரதுன்னு தான் தெரியல சரி ஒரு தலைப்பாவது முதல்ல வைக்கலாம்னு பாத்தா அதுக்கே தலைய பிச்சிக்க வேண்டியதாயிருக்கு. சே.. தலய பிச்சி பிச்சி உள்ள இருக்குற மண்ணே வந்துருச்சேன்னு பீல் பண்ணும்போது வந்த தலைப்பு தான் மண்ணாங்கட்டி (ஹி..ஹி..)
ஒரு வரி எழுதுரதுக்குள்ள ஒராயிரம் சந்தேகம் வருது என் தமிழ் மேல.. ஒரு காலத்துல (என்னது ! பிளாஸ்பேக்கா.. அவ்வ்வ்வ்..) ஸ்கூல்ல படிக்கும்போது தமிழ்னா அவ்ளோ பிடிக்கும். எழுத்துப்பிழையே இல்லாம எழுதுவேன். நான் ஸ்கூல்ல அதிகமா பாராட்டு வாங்குனது ரெண்டே விஷியத்துக்குத்தான் ஒன்னு தமிழ் அடுத்து கம்பியூட்டர் (ம்ம்ம்ம்.. இது உண்மை தாங்க). இந்த கம்பியூட்டர் கதையை இன்னோரு இடுகையிலே தெளிவா சொல்ரேன் இப்போ தமிழ பாக்கலாம்.
என்னோட தமிழ் ஆர்வம் தலை தூக்க ஆரம்பிச்சது என்னோட பத்தாவது வயசுல தான். அதுக்கு காரணம் ஒரு பொண்ணு (பத்தாவது வயசுலயேவா ? ஊரு உருப்டாப்லதான்). நான் அஞ்சு வரைக்கும் உள்ளூர்ல தான் படிச்சேன் (எங்கூர்ல அஞ்சு வரைக்கும் தான் பள்ளிக்கூடமே இருக்கு, இன்னிக்குவரைக்கும் :( ) ஆறாவதிலிருந்து என்ன பக்கத்தூர்ல இருக்குற மேல் நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டாங்க. அங்கதான் நான் அவள முதன் முதலா பார்த்தேன். நான் உட்கார்ந்திருந்த வரிசைக்கு அடுத்த வரிசையில் உட்கார்ந்திருந்தாள். நான் பார்த்த உடனே சி நேகமாக புன்னகைத்தாள். ஒரு ஆண் வெக்கப்பட்டு பார்த்திருக்கீங்களா? அவள் புன்னகைக்கு பதில் புன்னகையை தர முடியாமல் தலையை திருப்பிக்கொண்டேன் வெக்கத்தில்.
சரி அவளால தமிழார்வம் எப்டின்னு தான யோசிக்கிறீங்க. யோசிச்சிக்கிட்டே இருங்க.. மீதிய நாளைக்கு சொல்ரேன்
தொடரும்...
வர்ட்டா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக