பக்கங்கள்

திங்கள், 31 மே, 2010

மண்ணாங்கட்டி - Part 1

பந்தாவா ஆரம்பிச்சாச்சி ஆனா என்னத்த எழுதுரதுன்னு தான் தெரியல :( நானும் காலைல இருந்து மானிட்டர (ஹலோ.. நான் கணினித்திரையைச் சொன்னேன்) வெறிச்சிப் பார்த்துக்கிட்டு இருக்குறேன் ஆனா தக்காளி ஒன்னும் தோனமாட்டேங்குது !

சரி ஒரு கவிதையாச்சும் எழுதலாம்னு பாத்தா இன்னைக்குன்னு பாத்து ஒன்னும் வரமாட்டேங்குது (ஆமா இவரு டெய்லி நாப்பது பக்கம் கவிதை எழுதுராரு இன்னைக்குதான் பாவம் எதுவும் தோனலை, கேட்டுக்கோங்கப்பா). என்ன எழுதுரதுன்னு தான் தெரியல சரி ஒரு தலைப்பாவது முதல்ல வைக்கலாம்னு பாத்தா அதுக்கே தலைய பிச்சிக்க வேண்டியதாயிருக்கு. சே.. தலய பிச்சி பிச்சி உள்ள இருக்குற மண்ணே வந்துருச்சேன்னு பீல் பண்ணும்போது வந்த தலைப்பு தான் மண்ணாங்கட்டி (ஹி..ஹி..)

ஒரு வரி எழுதுரதுக்குள்ள ஒராயிரம் சந்தேகம் வருது என் தமிழ் மேல.. ஒரு காலத்துல (என்னது ! பிளாஸ்பேக்கா.. அவ்வ்வ்வ்..) ஸ்கூல்ல படிக்கும்போது தமிழ்னா அவ்ளோ பிடிக்கும். எழுத்துப்பிழையே இல்லாம எழுதுவேன். நான் ஸ்கூல்ல அதிகமா பாராட்டு வாங்குனது ரெண்டே விஷியத்துக்குத்தான் ஒன்னு தமிழ் அடுத்து கம்பியூட்டர் (ம்ம்ம்ம்.. இது உண்மை தாங்க). இந்த கம்பியூட்டர் கதையை இன்னோரு இடுகையிலே தெளிவா சொல்ரேன் இப்போ தமிழ பாக்கலாம்.

என்னோட தமிழ் ஆர்வம் தலை தூக்க ஆரம்பிச்சது என்னோட பத்தாவது வயசுல தான். அதுக்கு காரணம் ஒரு பொண்ணு (பத்தாவது வயசுலயேவா ? ஊரு உருப்டாப்லதான்). நான் அஞ்சு வரைக்கும் உள்ளூர்ல தான் படிச்சேன் (எங்கூர்ல அஞ்சு வரைக்கும் தான் பள்ளிக்கூடமே இருக்கு, இன்னிக்குவரைக்கும்  :( ) ஆறாவதிலிருந்து என்ன பக்கத்தூர்ல இருக்குற மேல் நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டாங்க. அங்கதான் நான் அவள முதன் முதலா பார்த்தேன். நான் உட்கார்ந்திருந்த வரிசைக்கு அடுத்த வரிசையில் உட்கார்ந்திருந்தாள். நான் பார்த்த உடனே சி நேகமாக புன்னகைத்தாள். ஒரு ஆண் வெக்கப்பட்டு பார்த்திருக்கீங்களா? அவள் புன்னகைக்கு பதில் புன்னகையை தர முடியாமல் தலையை திருப்பிக்கொண்டேன் வெக்கத்தில்.

சரி அவளால தமிழார்வம் எப்டின்னு தான யோசிக்கிறீங்க. யோசிச்சிக்கிட்டே இருங்க.. மீதிய நாளைக்கு சொல்ரேன்

தொடரும்...

வர்ட்டா...

ஹையா ! இதோ வந்துட்டேன் :)

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. நாமழும் ஒரு நோபல் பரிசு (இப்போ யாராச்சும் சிரிச்சீங்களா ? மூச் !) வாங்கனும்னு, சரி அதான் ஒரு பதிவை ஆரம்பிச்சி, அப்படியே படிப்படியா போய் நோபல் பரிசு தரற படிய தொட்டுடலாம்னு வந்திருக்கேன். அதனால மக்களே உங்களோட அமோக ஆதரவை அப்படியே அழுங்காம குலுங்காம முழுங்காம (எல்லா ஆமையும் தான் !) தருமாரு உங்களை மிரட்டி (அன்பா தான் :)) வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

நான் தமிழில் எழுதி நேத்தோட ஒரு ஏழு வருசம் ஆகிப்போச்சி, அதனால ஏதாவது தப்பு கிப்பு (கிப்புன்னு தமிழ்ல இருக்கா ?) இருந்தா மன்னித்தருழுமாறு மீண்டும் ஒரு முறை வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சரி, ஆரம்பிச்சாச்சி ஆனா எதப்பத்தி எழுத ?

அரசியல் பத்தி எழுதலாமா ? (வேனவே வேனாம், ஏற்கனவே அது ஒரு சாக்கடை நம்ம ஏன் அத போயி கிண்டிகிட்டு !) அது சரி !

அப்போ சினிமா ? (அட ராமா, நீயெல்லாம் எங்க நோபல் வாங்க போற) அய்யோ ! அப்ப சினிமாவும் இப்போ வேண்டாம்.

ம்ம்ம்ம் கவிதை ? (மவனே அப்படியே ஒடிப்போயிரு) ஹி..ஹி.. தெரியாம கேட்டுட்டேன்.

சரி அப்போ கதை ? (யாரு? நீ? கதை ? சயின்ஸ் எக்ஸாம்ல எழுதி முத்து சார்ட்ட முட்டி கிழிய வாங்குனத மறந்துட்டியா?) அட ஆமால்ல :( சரி அப்ப வேண்டாம்.

அப்ப பேசாம எழுதுரத விட்டுட்டு ஆபிஸ்ல ஒழுங்கா வேலய பாக்கட்டா? (அப்போ தமிழ் நாட்டுக்கு யாருதான்யா நோபல் வாங்கித்தர்ரது ?) ஹி..ஹி.. இது நல்ல பாயின்ட்.

மக்களே நான் ஒரு நாலு வரி எழுதுனதுக்கு, என் மனசாட்சியே இப்படி கேள்வி கேக்குதே அப்போ நான் தினமும் எழுதப்போறதப்பாத்து நீங்க என்னெல்லாம் கேக்கப்போறீங்களோ !!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்......

என்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் இல்லையா (எங்க புடிச்சான் பாருங்க பாயின்ட்ட) அதனால என்ன கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. ஹி..ஹி..

மீதிய நாளைக்கி பேசிக்கலாம் !

வர்ட்டா.....