பக்கங்கள்

செவ்வாய், 8 ஜூன், 2010

பீட்ரு


வந்துட்டான்யா பீட்டரு
வச்சிருக்கான் மேட்டரு
நைட்டானா குவாட்டரு
படங்காட்ரது தியேட்டரு

சரி..சரி.. முறைக்காதிங்க.. (ஹி..ஹி..)

          இப்ப எழுதப்போர விஷயம் எல்லாருக்கும் பயன்படுமான்னு தெரியல ஆனா சாட்ல (chat) அதிகமா கடலை போடுரவங்களுக்கும் ஆர்க்குட் (orkut), பேஸ்புக் (facebook) அதிகமா உபயோகிக்கிரவங்களுக்கும் ரொம்பவே பயன்படும். 

    சாட்ல கடலை போட புதுசா கால் எடுத்து வைக்கிரவங்கல அசிங்கப்படவிடாம காப்பாத்தனுங்கருக்குத்தான் இந்தப்பதிவே. அப்ப நீ அசிங்கப்பட்டியான்னு கேக்குரவங்கல்லாம் ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு உருப்படியா ஏதாவது வேல இருந்தா போய் பாருங்க. ஹி..ஹி..

      அக்ரனைம் (Acronym) இதுக்கு தமிழ்ல என்ன பேருன்னு தெரியல.... இப்பல்லாம் இது தெரியாம சாட் பண்ணிங்கன்னா உங்கள அங்கிள்னோ ஆன்ட்டீன்னோ முடிவு கட்டீருவாங்க அதனால இதப்பத்தி தெரியாதவங்க நல்லா தெரிஞ்சிக்கிட்டு சாட் பக்கம் போங்க நீங்க நிஜமாவே அங்கிளாவோ ஆன்ட்டீயாவோ இருந்தா கூட.. ஹி..ஹி..

  எனக்கு தெரிஞ்சவரைக்கும் கீழ தொகுத்திருக்கேன். அதுல பலது ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். நீங்களே பாத்துக்கோங்க..

LOL          Laughing out loud

LMAO      Laughing my a** off

OMG        Oh my gosh (god)

ROTFL    Rolling on the floor laughing

sup           What's up

TC            Take care

TY           Thank you

ZZZ         Sleeping

ASAP      As soon as possible

B/W        Between

b4            Before

BRB        Be right back

cya          See ya

FYI         For your information

gr8         Great

GTG      Got to go

IC          I see

IDK       I don't know

IMO      In my opinion

J/K       Just kidding


இதெல்லாம் நல்லா யூஸ் பண்ணி நீங்களும் இந்த தலைமுறைதான்னு நிரூபிங்க.. ஹி..ஹி..

k I GTG :)

வர்ட்டா...

திங்கள், 7 ஜூன், 2010

நடந்தது என்ன?


எழுத ஆரம்பிச்ச உடனே முதல் மூணு நாள் விரு விருன்னு எழுதீட்டேன். ஆனா பாருங்க எப்பயும் வெட்டியா இருக்குர எனக்கே கடைசி நாளு நாளா தொடர்ச்சியா பல கமிட்மென்ட்ஸ் (ஹி..ஹி..) நேத்து யுனிவர்சல் ஸ்டூடியோஸ் போனேன் சத்தியமா என் காசுல இல்லை ஆபிஸ்ல இருந்து கூட்டீட்டு போனாங்க.

சும்மா சொல்லக்கூடாது மெய்யாலுமே யுனிவர்சல் ஸ்டூடியோஸ் டாப் டக்கர் தான். ஒரு சில ரைடெல்லாம் ரொம்பவே நல்லாயிருந்தது. ஆனா என் நேரம் நேத்து வெயில் வெளுத்து வாங்க்கீருச்சி கைக்குட்டையை நாலு தடவ பிழிஞ்சி காயப்போட்டேன்னா பாருங்களேன். யுனிவர்சல் ஸ்டூடியோஸ் பத்தி விரிவா அடுத்த வாரம் படங்களோட எழுதலாம்னு இருக்கேன் ஏன்னா இந்த வாரம் திரும்பவும் போகப்போரேன் என் காசுல :( என்னோட ஆருயிர்த்தோழன் ஊர்ல இருந்து சிங்கையை சுத்திப்பாக்க வர்ரான் அதனால தான் இன்னொரு விஜயம் :) நான் சிங்கை வந்து ரெண்டு வருசம் ஆயிடுச்சி ஆனா இன்னும் பாதி ஊர்கூட சுத்திப்பாக்கல :( இனிமேதான் ஒவ்வொரு இடமா போகனும்.

-------------------------------------------------------------------------------------------------

உலகக்கோப்பை கால்பந்து ஆரம்பிக்கப்போகுது.

பல நாள் தூக்கம் கெடப்போகுது

ஆபிஸ் வேல மண்ணா போகப்போகுது. (ஹி..ஹி..)

அது என்னமோ தெரியல என்னோட நுண்ணறிவு தெளிவா சொல்லுது இந்த தடவ கோப்பை இங்கிலாந்துக்குத்தான்னு. அதனால நம்ம புல் சப்போர்ட் அவிங்களுக்குத்தான் :)

ஒருவேளை இது நடக்கலைன்னா யாரும் கண்டுக்காம லூஸ்ல விட பழகிக்கோங்க இப்பவே சொல்லீட்டேன் ஆமா.

ஒருவேளை இது நடந்துட்டா யாரும் ஜாதகம் பாக்கனும்னு வீட்டுப்பக்கம் வந்துடாதீங்கன்னும் இப்பவே சொல்லிக்கிரேன்.. ஹி..ஹி..

I Really liked the Official FIFA song of this world cup.

நீங்க இன்னும் கேக்கலன்னா ஒரு தடவ கேட்டுப்பாருங்க கண்டிப்பா பிடிக்கும்.

http://www.youtube.com/watch?v=uqbsaBMyPI0


மிச்சத்த நாளைக்கு பாக்கலாம்.

வர்ட்டா...

புதன், 2 ஜூன், 2010

மண்ணாங்கட்டி - Part 2

மண்ணாங்கட்டிங்கிற தலைப்புக்கும் உள்ள எழுதுர விசயத்துக்கும் என்ன சம்பந்தம்னு தயவுசெய்து யாரும் கேட்ராதீங்க. சத்தியமா எனக்கும் தெரியாது (ஹி...ஹி..)

சரி விட்ட எடத்தப் பாப்போம்.

தமிழுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்னு ரொம்ப யோசிச்சி பாவம் திண்டாடியிருப்பீங்க (டேய்.. டேய்.. உன் பிளாக்க இன்னும் ஒருத்தரும் படிக்கலடா...)

நான் படிச்ச வகுப்புல கிட்டத்தட்ட 50 பேர் இருந்தோம். தமிழ் டீச்சர் தான் எங்களோட கிளாஸ் டீச்சரும். நான் சேர்ந்த நாளாவது நாள் வகுப்புக்கு மாணவர் தலைவன் (கிளாஸ் லீடர்) வேணும் அதனால அதுக்கு ஒரு போட்டி வச்சி தேர்வு செய்யப் போரதாக டீச்சர் அறிவிச்சாங்க. போட்டின்னா அது கட்டாயப் போட்டியில்ல யார்யாருக்கெல்லாம் லீடர் ஆகனும்னு ஆசை இருக்கோ அவங்க மட்டும் கலந்துக்கலாம்னு சொல்லீட்டு உடனே யார்யாரெல்லாம் போட்டி போடப்போரீங்க கையத்தூக்குன்னாங்க.

டப டபன்னு ஒரு 20வது 25 பேர் தூக்குனாங்க. நான்லாம் என்னைக்கும் தலைவன் பதவிக்கு தேடிப்போரவனில்லைங்கரதால பேசாம இருந்தேன் (ஆமாடா.. அது அமெரிக்க சனாதிபதி பதவி நீ தேடிப்போகமாட்ட.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..).

தீடீர்னு ஒரு குரல் ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்னு யாரையோ கூப்ட்ட மாதிரி கேட்டுச்சி யாருடான்னு திரும்பிப் பாத்தா அதே பொண்ணு. நீயும் கையத்தூக்குன்னுச்சி. அது தான் அவ என் கிட்ட பேசுன மொத வார்த்தை. அவ்ளோ தான் என்ன ஏதுன்னு கேக்காம மகுடிக்கு மயங்குற பாம்பு மாதிரி உடனே கையத்தூக்கீட்டேன் (ஹி..ஹி.. அவ்ளோ குழந்த மனுசு..). உடனே அதுக்கும் சிநேகமா ஒரு புன்னகையைப் பூத்தாள். அப்ப கூட பாவிப்பய நான் பதிலுக்கு சின்னதா கூட சிரிக்கல. கையத்தூக்குன எல்லார் பேரையும் டீச்சர் எழுதுகிட்டாங்க.

போட்டி என்னன்னா டீச்சர் ஐம்பது தமிழ் வார்த்தைகளை ஒன்னொன்னா வரிசையா சொல்லுவாங்க யாரு அதிகமா எழுத்துப்பிழை இல்லாமா எழுதுறாங்களோ அவங்கதான் வகுப்புத்தலைவன்.

இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு எல்லாரும் நல்லா படிச்சிட்டு வாங்கன்னு சொல்லீட்டாங்க. எனக்கு வேர்த்திடுச்சி ஏன்னா நமக்குதான் எக்ஸாம்னாலே ஆகாதே. நான் கூட போட்டீன்னா ஒட்டப்போட்டி, கபடிப்போட்டீன்னு தாப்பா பீல் பண்ணீட்டேன். கூட படிக்கிற எங்க ஊர் பசங்க வேர டேய் ஊர் மானமே இதுல தான் இருக்குன்னு கெளப்பீட்டானுங்க (பாத்துக்கோங்க... அந்த வயசுலயே ஊர் மானத்தக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு நம்ம கைல தான் இருந்துச்சி.. ஹி..ஹி..)

என்ன பண்றதுன்னு தெரியாமா பேன்னு முழிச்சிட்டு இருக்கும்போது அவ வந்தா. நீ எப்படியாவது ஜெயிச்சிருவேன்னு தெரியும் அதான் உன்ன கையத்தூக்கச்சொன்னேன்னு மழலைக்குரல்ல சொல்லீட்டு விரு விருன்னு போய்ட்டா..சும்மாவா சொன்னாங்க ஒவ்வொரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருக்கான்னு (ஹி..ஹி..)

அப்போ நான் ஜெயிச்சிட்டேனா ? அப்டீன்னு சஸ்பன்ஸ்லாம் வைக்க மாட்டேன். நான் ஜெயித்தேன். ஆனா எப்படிங்குறதுதான் சஸ்பென்ஸே.. ஹி..ஹி..

அந்த ஜெயித்த கதையை அடுத்த பகுதியில பாக்கலாம்.

வர்ட்டா..

செவ்வாய், 1 ஜூன், 2010

பீட்டர் (பீட்ரு)

பீட்டர்

பல வருடங்களூக்கு முன்னாடி வெள்ளக்காரங்களூக்கு மத்தியில் மிகவும் பொதுவான பெயர். பத்துல நாலு பேருக்கு இந்த பேர் இருக்கும்.

வெள்ளக்காரன் நம்மள ஆட்சி செய்தபோது இங்க ஏகப்பட்ட பீட்டர்கள் இருந்ததாக எப்போதோ படித்த ஞாபகம்.

சரி பீட்டரைப்பத்தி போதும் நம்ம மேட்டருக்குப் போகலாம்.

பீட்ரு

நம்மில் பலர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை, பொதுவாக நண்பர்களிடம்.

உபயோகிக்க காரணம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்த பீட்ரு வந்ததே அந்த பீட்டர்ல இருந்துதான்.

எல்லாம் சரி, இப்போ நான் எதுக்கு இந்த மொக்க விளக்கம் தர்ரேன்னு தானே கேக்குரீங்க (கேக்களடா, கொலவெறியோட பாக்குறாங்க ) அவ்வ்வ்வ்... இதோ சொல்லீடரேன்.

இனிமே பீட்ருங்கற தலைப்புல அடிக்கடி (அடி வாங்காம இருந்தா சரி) எழுதப்போரேன்.

என்ன எழுதப்போரேன்னு பொறுத்திருந்து பாருங்க... இல்ல இல்ல படிங்க :)

வர்ட்டா..